திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, ஜி.என்.டி. சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இரும்பு கம்பம் சரிந்து உள்ளது. சாலைகள் நடுவில் உள்ள தடுப்பு மீது சரிந்து விழுந்து கிடப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் கம்பம் சரிந்து கிடப்பது தெரியாமல் சிலர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இரும்பு கம்பத்தை அந்த பகுதியில் இருந்து உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.