திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர், பாப்பரம்பாக்கம் முதல் நயப்பாக்கம் கிராம வரை உள்ள சாலை சேரும் சகதியாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் அரசு பஸ்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் வாகனங்கள் சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக இந்த பகுதியில் இருக்கும் பள்ளி மற்றும் நிறுவனங்களுக்கு செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் சரியான நேரத்தில் பணிக்கு செல்ல முடியவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.