மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் நீண்ட நாட்களாக மண் அள்ளப்படாமல் அதிக அளவில் தேங்கி குவியலாக கிடக்கின்றது. இதனால் காற்றில் அதிகளவில் புழுதி எழுந்து பாலத்தில் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கண்களில் விழுவதால் விபத்து ஏற்படுகிறது.. மேலும் சில வாகன ஓட்டிகள் இதில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே மேற்கண்ட பாலத்தில் தேங்கும் மண்ணை தொடர்ந்து முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.