சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ரெயில் நிலையத்தில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகிறது. இதனால் இரவு நேரங்களில் ரெயில் நிலையத்திற்கு வரும் பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும், ஒரு சில நேரங்களில் பயணிகளை நாய்கள் கடித்த துரத்துவதால் சிலர் கீழே விழுந்து காயம் அடையும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, பயணிகளின் பாதுகாப்பு கருதி மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.