ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் கொசு தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தூக்கமின்றி சிரமப்படுகின்றனர். மேலும் இவற்றால் மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.