மெஞ்ஞானபுரம் அருகே இலங்கநாதபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த தொட்டியின் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும், தூண்கள் விரிசல் விழுந்தும் காணப்படுகிறது. இதன் அருகில் குடியிருப்புகள் உள்ளன. எனவே ஆபத்தான குடிநீர் தொட்டியை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.