பழுதடைந்த அரசு கட்டிடம்

Update: 2026-10-25 19:05 GMT

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலர் கட்டிடம் பாழடைந்து தற்போது ஜன்னல்கள், கதவுகள் இல்லாத நிலையில், மேல் தளம் முழுவதும் செடிகள் வளர்ந்துள்ளன. தற்போது வருவாய் ஆய்வாளர் அலுவலகம் நூலக கட்டிடத்தில் இயக்கப்படுவதால் நூலக கட்டிடத்துக்கு செல்லக்கூடிய வாசகர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். புதிதாக வருவாய் ஆய்வாளர் கட்டிடத்தை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய கட்டிடம் அமைத்து தந்தால் நூலக கட்டிடத்தில் வாசகர்கள் நூல்களை படிப்பார்கள். இதுகுறித்து வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

-ராஜ்குமார், ஆரணி.

மேலும் செய்திகள்