ராதாபுரம் தாலுகா விஜயாபதியில் புதிதாக உடற்பயிற்சிக்கூடம் கட்டப்பட்டது. பின்னர் பல மாதங்களாகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. எனவே புதிய உடற்பயிற்சிக்கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.