பயன்பாட்டுக்கு வராத பள்ளி

Update: 2024-12-08 07:22 GMT

தர்மபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மணிக்கட்டி பொட்டல் ஊரில் மிகவும் பழமையான மழலையர் பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால், அங்குள்ள கோவிலின் அருகில் மற்றொரு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால், கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைவதுடன், சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் காணப்படுகிறது. எனவே, மழலையர்பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரெத்தின பூபதி, மணிக்கட்டிபொட்டல்.

மேலும் செய்திகள்