சுகாதார சீர்கேடு

Update: 2024-12-01 17:40 GMT

தாரமங்கலம் பஸ் நிலையம் அருகில் பவளத்தானூர் ஏரி உள்ளது. இந்த ஏரியோரம் உள்ள நடைபாதையையொட்டி செப்டிக் டேங்க் கழிவுகள், இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் ஆகியவை கொட்டப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் கொட்டப்படும் கழிவுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜாய், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்