குழந்தைகள் நல மைய கட்டிடம் கட்டப்படுமா?

Update: 2024-12-01 15:43 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூர் ஊராட்சியில் உள்ள மேலமந்தையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையம் ஒரு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் சேதம் அடைந்தால் முழுமையாக இடிக்கப்பட்டது. பின்னர் குழந்தைகள் நல மையம் வாடகை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது, செயல்பட்டு வரும் கட்டிடத்தை சுற்றி குப்பைகள் கொட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் குழந்தைகள் மையத்துக்குள் நுழையும் நிலை உள்ளது. இதனால் குழந்தைகள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே கூகூர் மேல மந்தையில் குழந்தைகள் மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்