அந்தநல்லூர் அருகே அயிலாப்பேட்டை பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்து புலிவலம் பகுதிக்கு உய்யகொண்டான் வாய்க்கால் ஆற்றைக் கடந்து உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கிறது. புலிவலம் செல்லும் வழியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் முள் புதர்கள், மரங்கள் முளைத்து மின் கம்பம் தெரியாத அளவுக்கு ஆக்கிரமித்துள்ளது. இதனால் அசம்பாவிதம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் கோப்பு பாலத்தில் இருந்து புலிவலம் செல்லக்கூடிய மின் கம்பங்களில் தெரு விளக்குகள் எரியாதால் அப்பகுதி இருள் சூந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.