திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை நகரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு மதுவாங்கி குடிக்கும் மதுபிரியர்கள் போதை தலைக்கேறியதும் அப்பகுதியில் தகராறு செய்கின்றனர். மேலும் அப்பகுதி பெண்கள் சாலையில் செல்லும்போது அவர்களை கிண்டல் செய்கின்றனர். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.