ரிஷிவந்தியம் ஒன்றியம் சின்ன மணியந்தல் வடக்கு தெருவில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அந்த வழியாக நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.