ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் போதிய அளவில் ஆம்புலன்ஸ் சேவை வசதி இல்லை. ஆம்புலன்சை மக்கள் அவசர மருத்துவ உதவிக்கு அழைக்கும் நேரங்களில் நீண்ட தூரத்தில் இருந்து வருகிறது. இதனால் அச்சமயத்தில் பொதுமக்கள் மற்றும் கர்ப்பினி பெண்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் ஆம்புலன்ஸ் வாகனம் வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.