ராமநாதபுரம் மாவட்டம் டவுன் பகுதிகளில் உள்ள அரண்மனை சாலைத்தெரு, பெரிய பஜார் போன்ற முக்கிய வீதிகளில் ஏராளமான பசு மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையை ஆக்கிரமிப்பு செய்து நடமாடி வருவதோடு சாலையில் ஆங்காங்கே அமர்ந்து கொள்வதால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகின்றது. மேலும் இதனால் அவ்வப்போது சிறுசிறு விபத்துக்களும் ஏற்படுவதால் அப்பகுதியில் செல்ல வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு அச்சமடைகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.