திருவள்ளூர் மாவட்டம், பல்லாவரம் பூவிருந்தமல்லியை இணைக்கும் பிரதான சாலை பம்மல் மெயின் ரோடு ஆகும். இந்த பகுதியில் மாடுகள் நடுரோட்டில் கூட்டம் கூட்டமாக படுத்து கிடக்கின்றன. மேலும் அந்த பகுதியாக செல்பவர்களையும் முட்டுவதற்கு துரத்துவது மட்டுமல்லாமல், சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதால் அடிக்கடி வாகன விபத்துக்களும் ஏற்படுகின்றது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலைகளில் அலைந்து திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.