ஏரியில் கலக்கும் கழிவு

Update: 2024-12-01 13:29 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு சுந்தர சோழபுரம் அருகே ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் கோழிக் கழிவுகள் மற்றும் ஓட்டல் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் ஏரியில் துர்நாற்றம் வீசுவதுடன் மிகபெரிய சுகாதார சீர் கேடும் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் ஏரியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்