திருவள்ளூர் மாவட்டம், காரனோடையில் மீன் மார்கெட் ஒன்று உள்ளது. இங்கு மீன் வாங்க தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த மீன் மார்கெட்டில் உள்ள மீன் கழிவுகள் சாலைகளில் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.