நிழற்குடை வேண்டும்

Update: 2024-12-01 13:24 GMT

சென்னை வடபழனி, திருநகர் ஜவஹர்லால் நேரு சாலையில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த நிறுத்தத்தில் இருந்து கோயம்பேடு செல்வதற்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இங்கு நிழற்குடை இல்லாமல் உள்ளது. அதிக அளவு மக்கள் பயணம் செய்யும் பஸ் நிறுத்தம் என்பதால், பஸ் ஏற வரும் பயணிகள் மழை மற்றும் வெயில் காலத்தில் கால்கடுக்க நிற்பதற்கு இடம் இல்லாமல் சிரமத்துடன் பஸ் ஏறி பயணம் செய்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுத்து நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் செய்திகள்