பாளையங்கோட்டை தியாகராஜநகர் 55-வது வார்டு 1, 2-வது தெருக்களில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதாக முருகன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு புதிய சாலை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.