அரியலூரில் இருந்து அம்மாக்குளம் செல்லும் சாலையில் அய்யப்பனேரி உள்ளது. இந்த ஏரிக்கு அருகில் உள்ள பொது சுகாதார கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை இந்த பொது சுகாதார கழிப்பிடம் திறக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பொது சுகாதார கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.