அரியலூர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலை நெடுகிலும் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் இரவு நேர ரெயிலில் பயணம் செய்வதற்காக பயணிகள் பலர் நடந்து செல்கின்றனர். இந்நிலையில், இவ்வாறு ரெயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் தெருநாய்கள் அதிகளவில் உள்ளதால் பொதுமக்களும், பயணிகளும் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரெயில் நிலையத்தை சுற்றிலும் உள்ள தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.