மயானத்திற்குள் முளைத்துள்ள செடி-கொடிகள்

Update: 2024-12-01 11:41 GMT

கரூர் மாவட்டம் நடையனூரில் இருந்து பேச்சிப்பாறை செல்லும் சாலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மயானம் உருவாக்கப்பட்டது. இந்த மயானத்தில் நடையனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இறந்தவர்களின் உடலை கொண்டு சென்று புதைப்பவர்களை அங்கு புதைத்தும், தகனம் செய்பவர்களை மயான எரிமேடையில் வைத்து எரித்தும், இறந்தவர்களுக்கு சடங்கு செய்தும் வருகின்றனர். இந்நிலையில் மயானத்திற்குள் ஏராளமான செடி- கொடிகள் முளைத்துள்ளதால் இறந்தவர்களை கொண்டு வரும்போது உடனடியாக புதைக்கவும், தகனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மயானத்திற்குள் முளைத்துள்ள செடி- கொடிகளை அகற்றி சீரமைத்து தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்