புதிய நிழற்குடை தேவை

Update: 2024-12-01 09:10 GMT

சுங்கான்கடை பகுதியில் பஸ் நிறுத்தமும், அதன் அருகில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் வசதிக்காக நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்லூரி மாணவ-மாணவிகள், முதியோர்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ் நிறுத்த நிழற்குடையின் மேல்பகுதியில் போடப்பட்டுள்ள தகரத்தினால் ஆன ஷீட்டுகள் காற்றின் வேகத்தில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், நிழற்குடை பயன்படுத்த முடியாமல் மாணவ-மாணவிகள், முதியோர்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்சிற்காக காத்து நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி நிழற்குடையின் மேல் பகுதியில் சேதமடைந்த ஷீட்டுகளை அகற்றுவதுடன், அங்கு புதிய நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்