திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி மூவேந்தர் நகர் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக அங்குள்ள குடியிருப்பை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் மழைநீர் வழிந்தோடாமல் குடியிருப்பு பகுதியிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே மழைநீரை வழிந்தோட செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.