அரியலூர் மாவட்டத்தில் எண்ணற்ற சிமெண்டு ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த சிமெண்டு ஆலைகளுக்கு தினமும் சுண்ணாம்புக்கல் எடுத்து செல்லும் டிப்பர் லாரிகளின் மோசமான வேகத்தால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் பள்ளி வாகனங்கள் மீதும் டிப்பர் லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டதால் விபத்துகளை தடுக்க வேண்டி கடந்த 2016-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட கலெக்டர் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும் அரியலூர் மாவட்டம் முழுவதும் கனரக வாகனங்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் இயங்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தினமும் காலையில் தடை செய்யப்பட்ட நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்களின் வாகனங்களுக்கு இடையூறாக வி.கைகாட்டி வழியாக அரியலூர் சாலையிலும், முத்துவாஞ்சேரி சாலையிலும் எண்ணற்ற லாரிகள் இயங்கி வருகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.