கடலூர் பஸ் நிலையத்தில் மணிக்கூண்டு பின்புறம் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை மூடியே கிடக்கிறது. இதனால் வெளியூர் செல்ல பஸ் நிலையத்துக்கு வரும் தாய்மார்கள் கடும் சிரமமடைகின்றனர். எனவே பூட்டிக்கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை மீண்டும் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.