இ-சேவை மையம் திறக்கப்படுமா?

Update: 2024-11-24 14:07 GMT

சென்னை மணலி, மாத்தூரில் அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வந்தது. கடந்த ஒரு வருடமாக ஊழியர்கள் இல்லாததால் இ-சேவை மையம் செயல்படவில்லை. இந்த பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் இந்த இ-சேவை மையத்தில் தான் சாதி சான்றிதழ், பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் பெற்று வந்தனர். தற்போது இ-சேவை மையம் செயல்படாடமல் இருப்பதால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே, மீண்டும் இ-சேவை மையம் செயல்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்