சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகரில் புதியதாக தபால் நிலையம் திறக்கப்பட்டது. இந்த பெயர் பலகை ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழ் மொழியில் பெயர் பலகை இல்லை. இதனால் ஆங்கிலம் தெரியாதவர்கள் தபால் நிலையம் இருப்பது தெரியாமல் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் வில்லிவாக்கம் தபால் நிலையத்தில், தமிழ் மொழியை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.