சென்னை புதுப்பேட்டை, பாஷா சாகிப் பகுதியில் மின்சார கேபிள்கள் சாலையில் புதைக்கப்படாமல் அபாயகரமான முறையில் வெளியில் தெரிந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சீரமைத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.