நாங்குநேரி தாலுகா கீழதேவநல்லூர் பஞ்சாயத்து தெற்கு காடுவெட்டி கிராமத்தில் பச்சையாறு கால்வாய்க்கு தெற்கு பகுதியில் சுமார் 30 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு தெருவிளக்குகள், சாலை அமைக்கப்படாததால் தெருவில் முட்செடிகள் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. எனவே சாலை, ெதருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.