தூத்துக்குடி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பொட்டல்காடு விலக்கில் இருந்து பழையகாயல் வரையிலும் சாலையோரம் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.