திருவெண்ணெய்நல்லூர் அருகே சரவணம்பாக்கம் வழியாக ராகவன் வாய்க்காலில் இருந்து அரசூரான் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் மூலமாக பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் சென்று அதன் மூலம் பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் தற்போது அரசூரான் வாய்க்கால் தூர்ந்துபோய் உள்ளதால் ஏரிக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கடும் அவதியடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் விரைந்து வாய்க்காலை தூர்வார வேண்டும்.