குருவிகுளம் யூனியன் பிள்ளையார்நத்தம் பஞ்சாயத்து பொன்னக்காவூருணி கண்மாயில் உள்ள உடைமாற்றும் அறை முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது. எனவே கட்டுமான பணிகளை விரைந்து நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.