திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் அரசூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் உள்ள தண்ணீரை இந்த பகுதி மக்கள் வீட்டிற்கு உபயோகத்திற்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது குளம் சரியாக பராமரிக்கப்படாமல் ஆகாய தாமரை அடர்ந்தும், சாக்கடை நீர் கலந்தும் அதிக அளவு கொசு உற்பத்தியாகிறது. இதனால் தண்ணீரை உபயோகிக்கும் மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் குளத்திதை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.