திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி 41-வது வார்டு, வீ.வ.வாரியம் பம்பிங் ஸடேஷன் அருகில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பத்திரி கட்டப்பட்டு 1½ வருடங்கள் மட்டுமே ஆகிறது. அதற்குள் ஆஸ்பத்திரி நுழைவுவாயிலில் உள்ள படி ஏறுவதற்கு வைக்கப்பட்டுள்ள கைப்பிடி சேதமடைந்துள்ளது. இதனால் சிகிச்சைக்கு வரும் முதியவர்கள் அந்த வழியாக ஏறி வர முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட் துறை அதிகாரிகள் படிகட்டு அருகில் புதிய கைப்பிடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.