பெயர் பலகை எங்கே?

Update: 2024-11-17 13:46 GMT

சென்னை துரைப்பாக்கம், கண்ணகி நகரில் நகர்ப்புற சமூக சுகாதார நிலையம் கடந்த ஒரு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியை சுற்றியுள்ள ஏராளமானோர் இங்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் சுகாதார நிலையத்தின் பெயர் பலகை இதுவரையில் வைக்கப்படாமல் உள்ளது. இதனால் புதிதாக சுகாதார நிலையம் வருபவர்கள் சுகாதார நிலையம் இருப்பது தெரியாமல் சுற்றித்திரியும் நிலை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுகாதார நிலையத்திற்கு பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்