சென்னை ஆதம்பாக்கம், ஸ்டேட் பாங்க் காலனியில் சாலை ஓரத்தில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மூடி சேதமடைந்து உள்ளது. இந்த மழைநீர் வடிகால்வாய் வாகனங்கள் திரும்பும் பகுதியில் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், அந்த பகுதியில் குழந்தைகள் அதிகமாக விளையாடுவதால் மழைநீர் வடிகால்வாயில் தவறி விழும் நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய் மூடியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.