சுகாதார வளாக பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

Update: 2024-11-17 13:21 GMT

கரூர் என்.எஸ்.கே. நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்து பயன்பாடு இன்றி இருந்தது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த இடத்தில் புதிய சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு, தற்போது சிறு சிறு பணிகளே உள்ள நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்