அம்பலபதி அய்யா பதியின் அருகில் ஒரு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்தேக்கத்தொட்டியின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதன் அருகில் கடைகள், குடியிருப்புகள் உள்ளன. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் ஒருவித அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்கதொட்டிய இடித்து அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.