டாஸ்மாக் கடையால் பெண்கள் அவதி

Update: 2024-11-17 11:21 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூரில் அரசு மதுபான கடை தற்போது இடமாற்றப்பட்டு, பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலும், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஊராட்சி அலுவலக கட்டிடம், கால்நடை மருத்துவ கட்டிடம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் இருக்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்து மதுப்பிரியர்கள் மது போதையில் தகாத வார்த்தைகளால் பேசுவதால் இப்பகுதியில் பெண்கள், மாணவிகள் நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்