பராமரிக்கப்படாத கோவில்

Update: 2024-11-17 11:21 GMT

அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லமேடு கிராமத்தில் பழமை வாய்ந்த குமரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது பராமரிப்பு இன்றி கோவிலை சுற்றி செடி கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் இக்கோவிலில் முறையாக பூஜை நடத்தப்படாமல் சிதிலமடைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இக்கோவிலை சீரமைத்து பூஜைகள் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்