பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வசிஷ்டபுரம், அத்தியூர், ஒகளூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அகரம்சீகூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மாட்டு வண்டிகளில் ஆற்று மணல் கடத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.