பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வாட்டம், அகரம்சீகூர் பஸ் நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டறியும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பல மாதங்கள் ஆனதால் தற்போது பராமரிப்பு இன்றி செயல்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.