ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2024-11-10 14:08 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புதுக்கோட்டை, திருவோணம், அம்புக்கோவில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது. ஆனால் பேரூராட்சிக்கு சொந்தமான கடைவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் சாலையில் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. எனவே கடை வீதி ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்