சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் பகுதிகளில் உள்ள சாலையில் மழை காலங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.