திருச்சி மாவட்ட மேற்கு தொகுதி சட்டமன்ற உள்பட்ட நியூ பாத்திமா நகர் 8-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதியான தார் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் வசதி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது மழைநீர் மண் சாலைகளில் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்படாமல் உள்ளதால் கழிவுநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.