தூர்வாரப்பட்டது

Update: 2024-11-10 10:03 GMT

கொட்டாரத்தில் இருந்து வட்டக்கோட்டைக்கு செல்லும் நெடுஞ்சாலையில் பெரியவிளை உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் உள்ள மழைநீர் ஓடை கழிவுகள் தேங்கி அடைக்கப்பட்டு இருந்தது. இதனால், மழைநீர் சாலையில் பாய்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி தினத்தந்தி ‘புகார்பெட்டி’யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையில் தேங்கிய கழிவுகளை தூர்வாரி சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

-ராமதாஸ் சந்திரசேகரன், சந்தையடி.

மேலும் செய்திகள்