செங்கல்பட்டு மாவட்டம், பணங்கோட்டூர் பகுதியில் தபால் நிலையம் ஒன்று உள்ளது. இந்த தபால் நிலையத்தை பேரமனூர், சட்டமங்கலம் , பணங்கோட்டூர் ஆகிய 3 கிராமங்களிலும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தபால் நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாமல் உள்ளது. இதனால் தபால் நிலையம் வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், தபால் நிலையத்தில் வேலை செய்பவர்களும் போதிய இடவசதி இல்லாமல் தினமும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். எனவே, இந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் தபால் நிலையத்தில் போதிய இடவசதி செய்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள கோரிக்கை வைத்துள்ளனர்.